Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று சொல்வதை கேட்டிருப்போம். உண்மையில் வெண்டைக்காய் உடல் ஆரோக்கியத்தில் பல நன்மைகளை செய்கிறது.
நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காய் புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி1, பி2, பி6, பி9 போன்ற சத்துக்களையும் கொண்டுள்ளன.
ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிகம் கொண்ட வெண்டைக்காய் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியது,
வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
ஆனால், எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும், யார் குடிக்க வேண்டும், யார் குடிக்கக்கூடாது என்பது குறித்து முழுமையான புரிதல் இருக்க வேண்டும்.
வெண்டைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலைக் குறைக்கிறது. அஜீரணம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
வெண்டைக்காய் தண்ணீரை எப்படி தயாரிப்பது
ஐந்து புதிய வெண்டைக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். முனைகளை வெட்டி இரண்டாகப் பிரிக்கவும்.
இரண்டு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
காலையில் துண்டுகளை அகற்றி வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிக்கவும்.
வெண்டைக்காய் நீர் இயற்கையாகவே உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV