Enter your Email Address to subscribe to our newsletters
உசிலம்பட்டி, 24 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முண்டுவேலம்பட்டியைச் சேர்ந்தவர் கலை அழகேசன், பார்வட் ப்ளாக் கட்சி நிர்வாகியான இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும், மது போதைக்கு அடிமையான இவர் மது போதையில், ஆரியபட்டி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இளைஞருக்கு தர்ம அடி கொடுத்ததில், பலத்த காயமடைந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞர் கலை அழகேசன் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இளைஞரை தேடி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை இளைஞர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / Durai.J