Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 4 ஜூன் (ஹி.ச)
2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் பணிகள் குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களோடு இரண்டு நாட்கள் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் 2026க்கு தயாராகும் வகையில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருந்தார் , அதன் ஒரு பகுதியாக பூத் கமிட்டியை வலுப்படுத்தக்கூடிய பணிகளை அதிமுக தீவிர படுத்தியுள்ளது .
மாவட்ட வாரியாக உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை அமைத்து அதற்கான பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார் .
மே 15 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி பட்டியலை சமர்ப்பிக்க வலியுறுத்தி இருந்தார் பல்வேறு மாவட்டங்களில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் முழுமை பெறாத நிலையில் நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது .
இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களும் காலை மாலை இருவேளைகளிலும் தலா 20 முதல் 21 வரையிலான அமைப்பு ரீதியிலான மாவட்டங்களை அழைத்து தேர்தல் பணிகள் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விவாதிக்க உள்ளார்.
அதன்படி இன்று காலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சிவகங்கை அரியலூர் திண்டுக்கல் பெரம்பலூர் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும்
நாளை மதியம் கன்னியாகுமரி தூத்துக்குடி தென்காசி திருநெல்வேலி ராமநாதபுரம் விருதுநகர் தேனி மதுரை புதுக்கோட்டை ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / YUVARAJ P