Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 24
ஜூன்(ஹி.ச.)
மதுரையில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் தி.மு.க. சட்ட விதியின்படி, கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி உருவாக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் தி.மு.க.வில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் அணியின் தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் டி.எம்.என்.தீபக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / B. JANAKIRAM