Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
தென்னிந்திய திரைப்பட சமயலனம் பெப்சி, மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு மோதல் இருந்து வந்த நிலையில் இது குறித்து அமைச்சர் சாமிநாதன் தலைமையில் சுமூக முடிவை எட்டுவதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
வெகு நேரமாக நடைபெற்ற இந்த கூட்டம் முடிந்த பின்பு பெப்சி சங்கத் தலைவர் ஆர் கே செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார்,
நடிகர் சங்க நிர்வாகிகளும் பொதுவான அழைப்பில் கலந்து கொண்டார்கள்.எங்களோட பிரச்சினைகளையும் தயாரிப்பாளர் பிரச்சினையும் எடுத்து கூறினோம்.
சுமுகமான பிரச்சனை முடிவு கொண்டுவர அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்கள்.
இரு தரப்பினரும் என்ன பிரச்சனை என்பதை கடிதத்தை மூலம் சனிக்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தி உள்ளார்கள்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற திங்கக்கிழமை நடைபெறும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / YUVARAJ P