Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 24
ஜூன்(ஹி.ச.)
இந்திய அரசு கூகுள் குரோம் பயனர்களுக்கு அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்சைடில் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் (Vulnerabilities) காரணமாக ஹேக்கர்கள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு குறைப்பாட்டை வைத்து ஹேக்கர்கள் உங்கள் கணினியை கட்டுப்பாட்டில் எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அபாயம் விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் பயனர்களுக்கு அதிகம் உள்ளது. எனவே இந்த சிஸ்டம் வைத்திருக்கும் யூசர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீங்கள் கூகுள் குரோம் பதிப்பு 137.0.7151.119/.120 (விண்டோஸ்/மேக்) அல்லது 137.0.7151.119 (லினக்ஸ்) க்கு கீழே பயன்படுத்தினால், உங்கள் பிரவுசர் அபாயத்தில் உள்ளது. ஹேக்கர்கள் உங்களை ஆபத்தான வலைப்பக்கங்களுக்கு திசைதிருப்பி, உங்கள் தனிப்பட்ட தகவல்கள், நிதி விவரங்கள் மற்றும் வணிக தரவுகளை திருடக்கூடும்.
உடனடியாக உங்கள் குரோம் உலாவியை பாதுகாக்கும் வழிமுறைகள்
கூகுள் குரோம் பிரவுசர் அப்டேட் செய்து புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. உங்கள் பிரவுசரை இப்போதே அப்டேட் செய்யவும்.
- அதற்கு குரோம் பிரவுசரை திறக்கவும்
- மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி மெனுவை (⋮) கிளிக் செய்யவும்
- Settings (அமைப்புகள்) > About Chrome (குரோம் பற்றி) செல்லவும்
- குரோம் தானாகவே புதுப்பிப்புகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யும்
- புதுப்பிப்பு நிறைவடைந்ததும் பிரவுசரை மீண்டும் திறக்கவும்
- புதிய பதிப்பு 137.0.7151.119 அல்லது அதற்கு மேல் இருந்தால், நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்கள்.
பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
- Safe Browsing (பாதுகாப்பான உலாவல்) -ஐ Chrome செட்டிங்ஸ்களில் இயக்கவும்
- சந்தேகத்திற்கிடமான லிங்குகள் அல்லது pop-ups கிளிக் செய்ய வேண்டாம்
- மிகவும் பாதுகாப்பான கடவுச்சொற்கள் மற்றும் Two-Factor Authentication (2FA) பயன்படுத்தவும்
- நம்பகமான பாதுகாப்பு எக்ஸ்டென்சன்களை (Extensions) நிறுவவும் (எ.கா., Ad Blocker, Anti-Tracker)
- பிரவுசிங் தரவுகளை தவறாமல் அழிக்கவும்
- சரிபார்க்கப்படாத வலைத்தளங்களில் இருந்து கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
இந்த எச்சரிக்கை ஏன் முக்கியமானது?
இந்தியாவில் 48 கோடிக்கும் அதிகமானோர் தினசரி இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். குரோம் போன்ற பிரபலமான மென்பொருளில் ஏற்பட்டிருக்கும் ஒரு சிறிய பாதுகாப்பு குறைபாடு காரணமாக லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம்.
வணிகங்களுக்கு – தரவு திருட்டு அல்லது Ransomware தாக்குதல்கள் ஏற்படலாம்
தனிப்பட்ட பயனர்களுக்கு – Identity Theft (அடையாள திருட்டு) அல்லது நிதி மோசடி நடக்கலாம்
உங்கள் பிரவுசரை புதுப்பித்து, பாதுகாப்பாக பிரவுசிங் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், இந்த அபாயங்களிலிருந்து காக்க முடியும்.
Hindusthan Samachar / B. JANAKIRAM