Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி , 27 ஜூன் (ஹி.ச.)
அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து ‘சோசலிஸ்ட்’ மற்றும் ’மதச்சார்பற்ற’ வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தத்ரேய ஹோசபாலே வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உரையாற்றிய தத்தத்ரேய ஹோசபாலே, அவசரநிலையின் போது காங்கிரஸ் அரசாங்கத்தால் முகவுரையில் சேர்க்கப்பட்ட சோசலிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் நீடிக்க வேண்டுமா? என்று பரிசீலிக்க வேண்டும்.
அவசரநிலையை அமல்படுத்தியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படிப்பட்ட செயல்களைச் செய்தவர்கள் இன்று அரசியலமைப்பின் நகலுடன் சுற்றித் திரிகிறார்கள்.
அவர்கள் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை. உங்கள் முன்னோர்கள் இதைச் செய்தார்கள். இதற்காக நீங்கள் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டபோது, நீதித்துறை மற்றும் ஊடகங்களின் சுதந்திரமும் குறைக்கப்பட்டது. அவசரநிலை நாட்களில் பெரிய அளவிலான கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சையும் நடந்தது. என்று தெரிவித்தார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு புதன்கிழமை ஜூன் 25 ஆம் தேதி அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 'சம்விதான் ஹத்யா திவாஸ்' என்று அனுசரித்ததை தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் பலர் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது குறித்தும், காங்கிரஸ் குறித்தும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / J. Sukumar