Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)
அருண் விஜய் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான தடையறத் தாக்க திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்க்க நடிகர் அருண் விஜய் இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் படக்குழுவினர் வந்திருந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் அருண் விஜய்,
12 வருடங்கள் கழித்து தடையறத் தாக்க ரீ ரிலிஸ் செய்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. மிகழ் திருமேனி அவர்களின் மிக சிறந்த படைப்பு இது.
மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி இந்த படத்தை திரையரங்கில் பார்க்க இருக்கிறோம் அது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவர் எழுதியதிலேயே சிறந்த படைப்பை எனக்கு கொடுத்திருக்கிறார் மீண்டும் இணைந்து நடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
பழைய படங்களை ரிலீஸ் செய்து மீண்டும் திரையரங்கில் புதிய தலைமுறையினர் பார்க்க வைப்பது ஒரு சிறந்த வாய்ப்பாக தான் பார்க்கிறேன்
சினிமா துறையில் அனைவரையும் ஒப்பிட்டு பேசுவது தவறு.
போதைப் பொருள் வழக்குகளில் நடிகர்கள் கைது குறித்தான கேள்விக்கு No comments என தெரிவித்தார்.
நானும் அஜித் சார் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் அது அமைய வேண்டும் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குனர் மகிழ்திருமேனி,
எனக்கும் அருணுக்கும் இது மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த திரைப்படம் தடைகளை தகர்த்த ஒரு படம்.
இன்று இந்த படத்தை திரையரங்கில் காண ஒட்டுமொத்த குழுவும் இங்கு கூடி இருக்கிறது.
ஒரு நல்ல படம் காலத்திற்கும் நிற்கும் 13 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன போது இந்த படத்திற்கு தேதி கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. இன்று இந்த படம் காலத்தை கடந்து வந்துள்ளது.
மொழிகளை கடந்து வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் தடையறத் தாக்க
இந்த படத்தை திரையரங்கில் பார்த்தவர்களையும் இணையதளத்தில் பார்க்க பார்த்தவர்களின் கணக்கை எடுத்தால். இணையதளத்தில் பார்த்தவர்கள் திரையரங்கிற்கு வந்திருந்தால் அந்த ஆண்டு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கும்.
அருண் விஜய் மக்கள் மத்தியில் வளர்ந்தவர் கலைஞர் அவருடைய ஒழுக்கத்திற்கும் அவருடைய கடின உழைப்புக்கு நான் சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.
வெற்றி படத்தை தீர்மானிக்கக்கூடிய ஒன்று ரசிகரின் கையில் உள்ளது நல்ல படத்தை தீர்மானிக்க கூடிய காலத்தின் கையில் உள்ளது.
அருண் விஜயும் அஜித்தும் இணைந்தால் வேண்டாம் என்று சொல்லக்கூடிய இயக்குனர் யாராவது இருப்பாரா என்று தெரிவித்தார்
Hindusthan Samachar / YUVARAJ P