Enter your Email Address to subscribe to our newsletters
புலவாயோ , 30 ஜூன் (ஹி.ச.)
ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், கோடி யூசுப், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், கிரேக் எர்வினின் விக்கெட்டை தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்டில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
கேசவ் மகராஜ் 59 டெஸ்டில் (99 இன்னிங்ஸ்) 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 11 முறை 5 விக்கெட்டும், ஒருமுறை 10 விக்கெட்டும் (ஒரே டெஸ்டில்) வீழ்த்தியுள்ளார்.
Hindusthan Samachar / J. Sukumar