Enter your Email Address to subscribe to our newsletters
லாகூர், 1 ஜூலை(ஹி.ச.)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ரசிகர்களால் அன்புடன் கேப்டன் கூல் என அழைக்கப்படுகிறார். அவருக்கு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், வர்த்தக முத்திரை பதிவுக்கான வலைதளத்தில், கேப்டன் கூல் என்ற அடைமொழியை அவர் பதிவு செய்து அதற்காக விண்ணப்பித்து உள்ளார்.
அவருடைய இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது என அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 5-ந்தேதி தோனி சார்பில் விண்ணப்பம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதற்கான பதிவு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டு உள்ளது.
விளையாட்டுக்கான பயிற்சி, விளையாட்டு பயிற்சிக்கான வசதிகள் வழங்குதல், விளையாட்டு பயிற்சி மற்றும் சேவைகள் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எனினும், இதுபற்றி தோனி உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் ஹால் ஆப் பேமில், தோனியின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது.
போட்டியை முடிப்பதில், தலைவர் மற்றும் விக்கெட்கீப்பராக சிறந்த முறையில் செயல்படுபவர் தோனி என ஐ.சி.சி. அவருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளது.
நெருக்கடியான சூழலிலும் அமைதி காப்பதற்காக கொண்டாடப்படுபவர். ஈடுஇணையற்ற ராஜதந்திரங்களை கையாள்பவர் என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறது.
Hindusthan Samachar / B. JANAKIRAM