Enter your Email Address to subscribe to our newsletters
கன்னியாகுமரி , 1 ஜூலை
(ஹி.ச.)
குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலம் பள்ளம் படுவூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர்
டார்வின் (46) தொழிலாளியான இவருடைய மனைவி
நமிதா நித்திய செல்வி(39) இவர்களுக்கு 9 வயதில் பென்குரூஸ் ,டிக்ஸ்மெரின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் பென்குரூஸ்,கழுவன்திட்டை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் தங்கி படித்து வந்தார்.
டிக்ஸ்மென் அவரது பாட்டி வீட்டுக்கு சென்று சில நாட்கள் கடந்த நிலையில் கணவனும் மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்த நிலையில்.
நேற்று காலையில் இருந்து இரவு வரை டார்வின் வீட்டின் தலைவாசல் திறக்காமல் இருந்துள்ளது.
இரவில் வீட்டில் விளக்கு எரியாததை கண்ட அக்கம் பக்கம் வீட்டினர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது. அங்கு கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பபிதா நித்திய செல்வி கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். பிணத்தின் அருகில் பித்து பிடித்த நிலையில் கணவர் டார்வின் ஏதேதோ வார்த்தைகளை பிதற்றிய நிலையில் இருந்ததை அக்கம் பக்கத்தினர் கருங்கல் காவல் நிலையத்தில் தெரிவித்த நிலையில். காவலர்கள் உடன் சம்பவம் இடத்திற்கு வந்து சூழலை பார்த்து விசாரணை மேற்கொண்டபோது.
அதிகாலை நேரத்தில் கணவன்,மனைவிக்கு ஏற்பட்ட தகராறில் கணவனே,மனைவியை கொலை செய்தது தெரிய வந்த நிலையில் கணவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை அதிகாலையே கொலை செய்த கணவன் அதன் பின் கொலையை மறைக்க செய்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில்.
அதிகாலை முதல் முன் இரவு வரை மனைவியின் பிணத்துடன் பூட்டிய வீட்டிற்குள்ளே இருந்தது கருங்கல் முழுவதும் காட்டு தீ போல் பரவியது.
மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J