Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூலை (ஹி.ச.)
M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை உதயம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசியதாவது,
இந்தப் படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் சாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்து கடைசி 8 நாட்கள் மட்டும் ஷூட் முடிக்க முடியாமல் இருந்தது. அதற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்தவர் ஜி.வி. பிரகாஷ். படத்திற்காக அவர் பாதி சம்பளம்தான் வாங்கி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டப்பிங் முடித்து ஆடியோ லான்ச் வரை வந்திருக்கிறார். அவருக்கு என்றுமே கடமை பட்டிருக்கிறேன் என்றார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்,
30 வருடங்களுக்கு முன்னால் ‘பிளாக்மெயில்’ என்ற இந்தி படம் பார்த்தேன். காதலன் வில்லனாக மாறும் கதை அது. அந்தப் படத்தின் ஈர்ப்பு இந்த ‘பிளாக்மெயில்’ படத்தில் பார்த்தேன். அந்த அளவுக்கு கதையும் ஒளிப்பதிவும் அருமையாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் அருமையாக நடித்துள்ளார். இளையராஜாவுக்கு அடுத்து அருமையான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான். தயாரிப்பாளர்கள் படம் முடியும்போதும் பெரும்பாலும் சோகமாக இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். ஜிவி பிரகாஷால் ஒரு தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது பெருமையான விஷயம். படத்தின் ஹீரோ, ஹீரோயின் என எல்லோரும் வந்திருக்கும் ஆடியோ லான்ச் இதுதான் என நினைக்கிறேன். சாம் சிஎஸ் இசை அற்புதமாக வந்துள்ளது. படம் வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள் என்றார்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ்,
இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மாறனுடன் பணிபுரியும் இரண்டாவது படம் இது. நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் மற்றும் பின்னணி இசை நான் செய்திருக்கிறேன். ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படங்களில் அவரது நடிப்பு இதில் உச்சமாக இருக்கும். படத்திற்கு வில்லன் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். வில்லனை விட துரோகிகள் பயங்கரம். நம் கூட இருப்பவர்கள் துரோகி ஆகும்போது என்னவாகும் என்பதுதான் கதை. இந்த மாதிரியான கதைகள் அதிகம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. வசனம் இல்லாமல் இசை மூலமாக கதை சொல்ல வேண்டும் என்ற இந்த படம் எனக்கு திருப்தியாக அமைந்தது. எல்லோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். எதாவது ஒரு வகையில் இந்தப் படம் உங்களுக்கு நெருடலையும் எச்சரிக்கையையும் கொடுக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.
நடிகை தேஜூ அஸ்வினி,
இந்தப் படம் வெகு சீக்கிரம் நடந்தது. ஜிவி சாருடன் ஒரு நிமிட வீடியோ செய்திருந்தேன். அங்கிருந்துதான் இந்த வாய்ப்பு கிடைத்தது. யங் டேலன்ட்ஸூக்கு இதுபோல தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வரும் ஜிவி பிரகாஷ் சாருக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்தி பார்த்த இயக்குநர் மாறன் அவர்களுக்கும் நன்றி. சப்போர்ட் செய்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். வித்தியாசமான தேஜூவை பார்ப்பீர்கள். ஆகஸ்ட் 1 படம் வெளியாகிறது. இவ்வாறு பேசினார்.
நடிகை சந்திரிகா,
நான் தமிழ் சினிமாவுக்கு திரும்பி வர ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இந்தப் படத்தில் கம்பேக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி. நான் நடித்திருக்கும் பாட்டில்தான் கதை உள்ளது. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை. ஆகஸ்ட் 1 படம் பாருங்கள். இவ்வாறு பேசினார்
நடிகை பிந்து மாதவி,
ரொம்ப நாள் கழித்து அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.
Hindusthan Samachar / Durai.J