மன்னிப்பு கேட்டு கௌதம் கார்த்திக் அறிக்கை- காரணம் என்ன?
சென்னை, 3 ஜூலை (ஹி.ச.) நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் நடிகராக படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் கடல் படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு
Gautham


சென்னை, 3 ஜூலை (ஹி.ச.)

நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் நடிகராக படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் கடல் படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு 1947 என்கிற படம் வெளியானது. அதன்பின் கடந்த 2 வருடங்களாக அவருக்கு எந்த படமும் வெளியாகவில்லை

தற்போது கிரிமினல், மிஸ்டர் எக்ஸ், ரூட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,

அன்புள்ள அனைவருக்கும்,

என் காதுகளுக்கு அடிக்கடி வரும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து தெளிவுபடுத்துவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

கடந்த 2 ஆண்டுகளாக, பலர் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் யாரைத் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை என்றும், அல்லது கடந்த காலத்தில் என்னை நிர்வகித்தவர்களிடம் சென்று வருவதாகவும் கூறி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 2023 முதல் கோபிநாத் திரவியம் தான் அதிகாரப்பூர்வமான எனது மேலாளர்.அவரால்தான் எனது சினிமா தொடர்பான அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த குழப்பத்தால் யாராவது சிரமத்திற்கு ஆளாகியிருந்தால் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.எதிர்காலத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / YUVARAJ P