“மாமன்” திரைப்படம், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது
சென்னை,31 ஜூலை (ஹி.ச.) இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல் திரையிடப்படுகிறது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி
மாமன்


சென்னை,31 ஜூலை (ஹி.ச.)

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல் திரையிடப்படுகிறது.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள 'மாமன்' திரைப்படம், மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் நடிகர் ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அனைத்து வயதினரையும் ஈர்க்கும் என்பது உறுதி.

OTT வெளியீடு குறித்து இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் பகிர்ந்து கொண்டதாவது,

“மாமன்” என் மனதுக்கு நெருக்கமான படம், இப்படம் குடும்ப உறவுகளின் ஆழத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அற்புதமான கதை.

இப்படத்தை மிகச்சரியான முறையில் உருவாக்கியதில் முழுப்பங்களித்த எங்கள் குழுவை நினைத்துப் பெருமைப்படுகிறேன், மேலும் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ஆழத்தைக் கொண்டு வந்த சூரி அண்ணாவின் அற்புதமான நடிப்புக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். என்றார்.

Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV