கிராண்ட் செஸ் 2025 - கார்ல்சனை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு குகேஷ் முன்னேற்றம்
ஷக்ரெப் , 4 ஜூலை (ஹி.ச.) கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் 2025 போட்டிகள் குரோஷியா நாட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 6 வது போட்டியில் இந்திய இந்திய இளம் கிராண்ட் மாஸ்டரும் உலக சாம்பியனுமான டி.குகேஷ், கார்ல்சனை எதிர்கொண்டார். கர
கார்ல்சனை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு குகேஷ் முன்னேற்றம்


ஷக்ரெப் , 4 ஜூலை (ஹி.ச.)

கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் 2025 போட்டிகள் குரோஷியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற 6 வது போட்டியில் இந்திய இந்திய இளம் கிராண்ட் மாஸ்டரும் உலக சாம்பியனுமான டி.குகேஷ், கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த போட்டியில் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், போட்டி புள்ளிகள் பட்டியலில் குகேஷ் முதலிடத்திற்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் குகேஷ் தொடர்ச்சியாகப் பெற்ற ஐந்தாவது வெற்றி இதுவாகும்.

முன்னதாக இரண்டாம் நாள் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவ் மற்றும் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியானோ கருவானா ஆகியோருக்கு எதிராகவும் குகேஷ் வெற்றி பெற்றார்.

இதுபோன்ற போட்டிகளில் குகேஷ் சிறந்து விளங்க முடியும் என்று எதையும் நிரூபிக்கவில்லை. அவரை பலவீனமான வீரர்களில் ஒருவராக நான் கருதுகிறேன், என்று போட்டிக்கு முன்னதாக கார்ல்சன் பேட்டியளித்திருந்த நிலையில், அவரை குகேஷ் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / J. Sukumar