மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி - இங்கிலாந்துக்கு எதிரான 3 வது போட்டியில் இந்தியா தோல்வி
லண்டன் , 5 ஜூலை (ஹி.ச.) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவதாக நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் மற்றும் இரண்டாவது போட
இங்கிலாந்துக்கு எதிரான 3 வது போட்டியில் இந்தியா தோல்வி


லண்டன் , 5 ஜூலை (ஹி.ச.)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

முதலாவதாக நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் மற்றும் இரண்டாவது போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் எடுத்தது. சோபியா டங்க்ளே 75 ரன்னும், வியாட் ஹாட்ஜ் 66 ரன்களும் அடித்தனர். இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி, தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், ஷபாலி வர்மா 47 ரன்னிலும், ஸ்மிர்தி மந்தனா 57 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேற, கவுர் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 166 ரன்கள் எடுத்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் இந்தியா ஹாட்ரிக் வெறியை நழுவவிட்டது.

தற்போது 2-1 என்ற கணக்கில் தொடர் தொடர், நான்காவது போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், வெற்றி பெற்று தொடரில் நீடிக்கும் முனைப்பில் இங்கிலாந்தும் ஈடுபடும் என்பதால், 4 வது போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / J. Sukumar