Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 5 ஜூலை (ஹி.ச.)
உணவு பொருட்களுக்கு
உடனடி ரிசல்ட் உணவகங்கள், சாலையோரம் உணவு தயாரிப்பாளர்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் தரமானதா என கண்டறிவதுடன், அதனை உறுதி படுத்தி கொள்ளும் விதமாக, சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடமாடும் ஆய்வகம் எழும்பூரில் செயல்பட்டது.
உணவு பொருட்களான நெய், டீ தூள், மஞ்சள், மசாலா பொருட்கள், இனிப்பு வகைகள் போன்ற உணவு பொருட்கள் பகுப்பாய்வாளர் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் உணவு பொருட்களின் தரம் உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டு, அதற்குண்டான பரிசோதனை முடிவும் தெரிவிக்கப்படது.
Hindusthan Samachar / YUVARAJ P