Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 5 ஜூலை (ஹி.ச.)
எல்லோரும் WhatsApp-வை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் அதில் இருக்கும் சில ஈஸியாக அம்சங்கள் தான். வேகமான மெசேஜ் செய்துவிட முடியும். வாட்ஸ்அப் குழு ஃபீச்சர்கள் இருக்கின்றன. ஏன்? நமக்கு நாமே கூட மெசேஜ் அனுப்பும் வசதி எல்லாம் உள்ளது.
ஆனால், ஒரு basic கேள்வி பலரிடத்திலும் இருக்கிறது. அது என்னவென்றால், மொபைல் எண்ணை காண்டாக்ட்ல் சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்பும் வசதி இருக்கிறதா, அப்படி என்றால் அதை ஒரே ஒருமுறை மட்டும் மெசேஜ் அனுப்புபவர்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்ற சந்தேகம் பலரிடத்திலும் இருக்கிறது.
மொபைல் எண்ணை சேமிக்காமல் மெசேஜ் அனுப்புவது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம். இதற்கு நீங்கள் டெக் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டியதில்லை, சுலபமாக செய்யலாம்!
1. Message Yourself ட்ரிக்
- உங்கள் WhatsApp-ல் உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து செல்ஃப் சேட்டை திறக்கவும் (உங்கள் பெயருடன் (You) என்று இருக்கும்).- அதில் அனுப்ப வேண்டிய எண்ணை டைப் செய்து உங்களுக்கே அனுப்பிக் கொள்ளவும்- அந்த மொபைல் எண் இப்போது உங்கள் சாட்டில் இருக்கும்.- இப்போது அந்த எண்ணை கிளிக் செய்து, Chat with
என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது மொபைல் எண் சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்ப முடியும் என்பதை அறிந்திருப்பீர்கள்
- இந்த மெத்தட் லேட்டெஸ்ட், மூன்றாம் தரப்பு ஆப்ஸ் தேவையில்லை, ஒரே ஒரு முறை பேச வேண்டியவர்களுக்கு பெர்ஃபெக்ட்டாக உதவும்.
2. WhatsApp குரூப் சேட்
- குரூப் சேட்டில் உள்ள யாருக்காவது எண் சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்பலாம்.
- குரூப் சேட்டில், எண் சேவ் செய்யாத நபரை கிளிக் செய்யவும்.
- ஒரு பாப்-அப் வரும், மெசேஜ் ஐகானை தேர்ந்தெடுக்கவும்.
- குரூப் மெம்பர் லிஸ்டில் இருந்தும் எண்ணைத் தேர்ந்தெடுத்து Message
செய்யலாம்.
3. WhatsApp 'Click to Chat' வெப் டூல்
- WhatsApp-ன் Click to Chat டூல், மொபைல் எண் சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்ப உதவும்.
- இந்த லிங்கை பயன்படுத்தவும்: https://wa.me/phone-number
- phone-number-க்கு பதிலாக, முழு எண்ணை உள்ளிடவும் (+, - போன்று எதுவும் வேண்டாம்).
- எண்டர் அடிக்கவும், WhatsApp அந்த எண்ணுடன் ஒரு சேட் திறக்கும்.
- Continue chatting செய்யவும்.
- இது டெஸ்க்டாபில் இருந்து மெசேஜ் அனுப்ப உதவும்
4. ஐஃபோன் பயனர்களுக்கு ஷார்ட்கட்ஸ்
- ஐஓஎஸ் பயனர்களுக்கு Siri ஷார்ட்கட்ஸ் ஒரு எளிய வழி.
- பிரௌசரில் WhatsApp Unsaved Number Siri Shortcut என்று தேடவும்.
- Add Shortcut செய்யவும்.
- ஷார்ட்கட் ரன் செய்து, எண்ணை உள்ளிடவும்.
- பெர்மிஷன்கள் கொடுக்கவும்.
- வாய்ஸ் கமாண்ட்ஸ் மூலம் எளிதாக மெசேஜ் அனுப்பலாம்!
5. தர்ட்-பார்ட்டி ஆப்ஸ்
- பிளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டு/ஐஓஎஸ்-க்கு ஒரு நம்பகமான ஆப் டவுன்லோட் செய்யவும்.
- எண்ணை (country code உடன்) உள்ளிடவும்.
- Start Chat in WhatsApp செய்யவும்.
அடிக்கடி புதிய எண்களுக்கு மெசேஜ் அனுப்புபவர்களுக்கு இது ஸ்மார்ட் தேர்வு.
Hindusthan Samachar / B. JANAKIRAM