Enter your Email Address to subscribe to our newsletters
போபால் , 5 ஜூலை (ஹி.ச.)
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் அன்வர் காத்ரி, இஸ்லாமிய இளைஞர்களுக்கு பணம் கொடுத்து, இந்து பெண்களை காதலிக்க வைத்து லவ் ஜிகாத் சதித்திட்டத்தை திட்டமிட்டதாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவும் வெடித்துள்ளது.
பங்கங்கா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, இந்தூர் காவல்துறையினரால் சாஹில் ஷேக் மற்றும் அல்தாஃப் அலி ஆகிய இரு ஆண்கள் கைது செய்யப்பட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. காதல் உறவுகளை ஏற்படுத்த ஆண்கள் தங்கள் மத அடையாளங்களை மறைத்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு இந்து பெண்கள் குற்றம் சாட்டினர்.
போலீஸ் விசாரணையின் போது,
காங்கிரஸ் கவுன்சிலர் அன்வர் காத்ரி இந்து பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து, அவர்களை திருமணம் செய்து, இஸ்லாத்திற்கு மாற்றுவதற்காக சாஹில் என்பவருக்கு ரூ.2 லட்சமும், அல்தாஃபுக்கு ரூ.1 லட்சமும் பணம் கொடுத்ததாக, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தெரிவித்தனர்.
இதையடுத்து அன்வர் காத்ரி மீது மத சுதந்திரச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவரது கடந்தகால குற்றப் பதிவு மற்றும் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை மதிப்பிட்ட பிறகு, இந்தூர் மாவட்ட ஆட்சியர் அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை செய்தார்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதிலிருந்து அன்வர் காத்ரி தலைமறைவாக இருப்பதால், அவரைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்குவதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ்,
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் யாரும் தப்பமாட்டார்கள். சட்டம் தன் கடமையை செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தலைமறைவான கவுன்சிலரைக் கைது செய்ய இந்தூர் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / J. Sukumar