Enter your Email Address to subscribe to our newsletters
ஹைதராபாத், 5 ஜூலை (ஹி.ச.)
ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய அல்லூரி சீதாராம ராஜூவின் 128 வது பிறந்த நாளை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
அப்படி பேசிய ராஜ்நாத் சிங்:
நக்சல் மையங்கள் அனைத்தும், கல்வி மையங்களாக மாறி வருகின்றன.
பழங்குடியின பகுதிகள் நக்சலைட்களின் விஷத்தை எதிர்கெள்ள வேண்டிய கடினமான நேரம் இருந்தது. இருப்பினும், அந்த விஷத்தை விரைவாக ஒழித்து வருகிறோம்.
நக்சலைட் வழித்தடங்கள் என முன்னர் அறியப்பட்ட இடங்கள் அனைத்தும் தற்போது வளர்ச்சிக்கான வழித்தடங்களாக மாறி வருகின்றன.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த நிலையில், பல பழங்குடியின கிராமங்கள் இன்னும், டிஜிட்டல் உலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
Hindusthan Samachar / B. JANAKIRAM