Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி , 5 ஜூலை (ஹி.ச.)
டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வர இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முட்டுக்கட்டைக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி காலக்கெடுவிற்கு பணிவுடன் அடிபணிவார் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா தனது நலன்களைப் பாதுகாத்தால் மட்டுமே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்ததற்கு பதிலடியாக ராகுல் காந்தி, இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.
பியூஷ் கோயல் தனது மார்பில் அடித்துக் கொள்ளலாம். என் வார்த்தைகளைக் கவனியுங்கள், டிரம்ப் வரி விதிப்பு காலக்கெடுவிற்கு மோடி பணிவுடன் அடிபணிவார்” என்று ராகுல் காந்தி சோசியல் மீடியாவில் பதிவு வெளியிட்டுள்ளார்.
”இந்தியா ஒருபோதும் காலக்கெடு அல்லது நேர அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபடுவதில்லை. அது இரு தரப்பினருக்கும் வெற்றி அளிக்கும் ஒப்பந்தமாக இருக்க வேண்டும்.
மேலும் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும்போது மட்டுமே, ஒரு நல்ல ஒப்பந்தம் ஏற்பட்டால், வளர்ந்த நாடுகளுடன் ஈடுபட இந்தியா எப்போதும் தயாராக இருக்கும்” என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / J. Sukumar