Enter your Email Address to subscribe to our newsletters
பெங்களூர் , 6 ஜூலை (ஹி.ச.)
இந்திய நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா பெயரில் பெங்களூரில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025’ போட்டி நடத்தப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் நீரஜ் சோப்ரா போட்டியிடுவதைக் காண ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில், நீரஜ் ஒரு தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நேற்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், நீரஜ் தனது மூன்றாவது முயற்சியில் 86.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். கென்யாவின் ஜூலியஸ் யெகோ 84.51 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இலங்கை தடகள வீரர் ருமேஷ் பதிரேஜ் 84.34 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மற்றொரு இந்திய தடகள வீரர் சச்சின் யாதவ் 82.23 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார். நீரஜ் சோப்ரா இந்தப் போட்டியின் அமைப்பாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது
Hindusthan Samachar / J. Sukumar