Enter your Email Address to subscribe to our newsletters
காரைக்கால், 8 ஜூலை (ஹி.ச.)
காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காரைக்கால் அம்மையார் ஆலயம் அமைந்துள்ளது இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாங்கனித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
மாங்கனி திருவிழாவின் போது சிவபெருமான் பவழக்கால் வாகனத்தில் பிச்சாண்டவர் கோலத்தில் காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருவது வழக்கம். அப்போது சுவாமி வீதியுலா வரும் வீதிகளில் உள்ள மது கடைகள் மற்றும் மாமிச கடைகளை அடைக்க தேசிய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு அமைப்பின் மாநில அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் துணை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது,
மாங்கனி திருவிழாவின் போது சுவாமி வீதியுலா வரும் வீதிகளில் உள்ள மது கடைகள் மற்றும் மாமிச கடைகளை அடைக்க வேண்டும், பக்தர்கள் அர்ச்சனைக்கு மற்றும் வீதியுலாவின் போது இறைக்கவும் பயன்படுத்தும் மாம்பழங்கள் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J