Enter your Email Address to subscribe to our newsletters
மயிலாடுதுறை, 8 ஜூலை (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே ரயில்வே லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் ரயில் மீது மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக கேட் கீப்பர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக, மயிலாடுதுறையில் இருந்து கடலூர் மார்க்கத்தில் செல்லும் பல்வேறு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக விழுப்புரம் செல்லும் பாசஞ்சர் ரயில் ஆலப்பாக்கம் வரை மட்டுமே செல்லும் என்றும், விழுப்புரம் ஆலப்பாக்கம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதுபோல் கடலூர் துறைமுகத்திலிருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் புது சத்திரத்திலிருந்து இன்று இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக தாம்பரம் வரை செல்லும் சிறப்பு கட்டண எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரத்துடன் நிறுத்தப்படுவதாகவும் சிதம்பரம் தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மைசூரில் இருந்து கடலூர் துறைமுகம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சீர்காழி ரயில்வே நிலையத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
Hindusthan Samachar / ANANDHAN SELLAPPAN