ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்-நியூசிலாந்து அணி அறிவிப்பு
வெல்லிங்டன், 8 ஜூலை(ஹி.ச.) நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரு, 30ம் தேதி தொடங்குகிறது. தொடரின் இரு போட்டிகளும் புலவாயோவில் நடக்கிறது. இந்நிலையில், இந்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; நியூசிலாந்து அணி அறிவிப்பு


வெல்லிங்டன், 8 ஜூலை(ஹி.ச.)

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரு, 30ம் தேதி தொடங்குகிறது. தொடரின் இரு போட்டிகளும் புலவாயோவில் நடக்கிறது.

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு டாம் லாதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் சீனியர் வீரர்களான கேன் வில்லியம்சன், மைக்கேல் பிரேஸ்வெலுக்கு இடம் அளிக்கப்படவில்லை. மேலும் இந்த அணியில் மேத்யூ பிஷர் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்து அணி விவரம்;

டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளெண்டல் (விக்கெட் கீப்பர்), டெவான் கான்வே, ஜேக்கப் டப்பி, மேத்யூ பிஷர், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில்லியம் ஓ ரூர்க், அஜாஸ் படேல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர், நாதன் ஸ்மித், வில் யங்.

Hindusthan Samachar / B. JANAKIRAM