மாணவர்கள் கல்வியோடு சேர்த்து ஓவியத்தையும் கற்க வேண்டும் - அமைச்சர் திருமுருகன் வேண்டுகோள்
புதுச்சேரி, 8 ஜூலை (ஹி.ச.) புதுச்சேரி மாநிலம் காரைக்காவில் புதுவை கலைமாமணிகள் நல வாழ்வு சங்கத்தின் சார்பாக காரைக்கால் வடமறைக்காடு, காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியினை புதுச்சேரி மாநில கலை பண்பாட்டு து
அமைச்சர்


புதுச்சேரி, 8 ஜூலை (ஹி.ச.)

புதுச்சேரி மாநிலம் காரைக்காவில் புதுவை கலைமாமணிகள் நல வாழ்வு சங்கத்தின் சார்பாக காரைக்கால் வடமறைக்காடு, காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி

நடைபெற்றது.

இக்கண்காட்சியினை புதுச்சேரி மாநில கலை பண்பாட்டு துறையின் அமைச்சர் திருமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இக்கண்காட்சியில் காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியரும் புதுவை கலைமாமணிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளருமான முத்துக்குமாரின் 60க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள், 40க்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் பள்ளி மாணவிகளால் வரையப்பட்ட 200 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றன.

மேலும் தர்மாகோலை கொண்டு புத்தகங்கள்,காய்கறிகள், பொம்மைகள் மற்றும் பழங்கால நாணயங்கள், பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறித்த சுவடுகள் மற்றும் பல்வேறு பொருட்களைக் கொண்டு கலைப் பொருட்கள் மற்றும் ஓவியங்களை அமைச்சர் திருமுருகன் பார்வையிட்டார்.

தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய அமைச்சர் கலைநயமிக்க இந் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தான் இந்த ஓவிய கண்காட்சிக்குள் நுழையும் பொழுது எண்ணற்ற பொருட்கள் மற்றும் ஓவியங்கள் தன்னை வியந்ததாகவும் ஆசிரியர் முத்துக்குமார் பல்வேறு பழைய பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்களாக மாற்றி காட்சிப்படுத்தியது மிகச்சிறந்ததாக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் மாணவப் பருவத்தில் தான் பயின்ற ஓவியங்கள் குறித்து பேசிய அமைச்சர் மாணவர்களாகிய நீங்கள் பள்ளியின் பருவத்தில் கல்வியோடு சேர்ந்து இதுபோன்ற ஓவியங்களில் தங்களை ஈடுப்படுத்தி கொண்டு கலை அறிவும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் ஒரு பொருளை பார்த்து அதேபோன்று செய்வதுதான் கலைநயம் என்று கூறிய அமைச்சர் கல்வியோடு சேர்த்து ஓவியத்தையும் கற்றால் ஒவிய ஆசிரியராக வர முடியும் என மாணவ மாணவியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Hindusthan Samachar / Durai.J