Enter your Email Address to subscribe to our newsletters
பெங்களூர், 8 ஜூலை(ஹி.ச.)
ஆக்ஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலாளருமான வி.நாராயணன் மற்றும் விஞ்ஞானிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடினர்.
அப்போது, தலைவர் சுபன்ஷுவின் நல்வாழ்வில் தனது மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்தப்படும் பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரித்தார்.
சுபன்ஷு பூமிக்குத் திரும்பிய பிறகு அனைத்து சோதனைகள் மற்றும் செயல்பாடுகளையும் கவனமாக ஆவணப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் வலியுறுத்தினார்.
ஏனெனில் இது இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானின் வளர்ச்சிக்கு முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும் என்றார்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் தங்கள் 14 நாட்கள் தங்களது ஆய்வு பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 10 ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / B. JANAKIRAM