சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய தலைவரானார் நடிகர் பரத் -பட்டாசு வெடித்து ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 2025-28 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் 4 அணிகள் போட்டியிட்டன. முன்னாள் தலைவர் சிவன் ஸ்ரீநிவாசன் தலைமையிலான வசந்தம் அ
Serial


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 2025-28 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் 4 அணிகள் போட்டியிட்டன. முன்னாள் தலைவர் சிவன் ஸ்ரீநிவாசன் தலைமையிலான வசந்தம் அணி, தினேஷ் தலைமையிலான உழைக்கும் கரங்கள் அணி, பரத் தலைமையிலான சின்னத்திரை வெற்றி அணி போட்டியிட்டன. நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ்கர் இருவரும் புரட்சி படை என்ற அணியில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தேர்தலின் வாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.மொத்தமுள்ள 2106 உறுப்பினர்களில் 1600 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். 500க்கும் மேற்பட்ட‌ உறுப்பினர்கள் சந்தா செலுத்தாத காரணத்தால் வாக்களிக்க தகுதி இல்லாதவர்களாக அறிவிக்கப்பட்டனர். முன்னாள் பெப்சி அமைப்பின் செயலாளர் உமா சங்கர் பாபு தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.

வாக்குப்பதிவின் முடிவில் மொத்தம் உள்ள 1600 வாக்குகளில் 859 வாக்குகள் பதிவானது. தபால் ஓட்டுகள் 77 சேர்த்து மொத்தம் 936 வாக்குகள் பதிவானது.

தலைவர் , பொதுச் செயலாளர், பொருளாளர் வாக்குகள் இன்று இரவே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மற்ற பதவிகளுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளது.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கான தேர்தலில் புதிய தலைவராக பரத் வெற்றி பெற்றார். 491 வாக்குகள் பெற்று இந்த வெற்றியை உறுதி செய்தார் இதனை அவர்களது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து இதே சின்னத்திரை வெற்றி அணி சார்பாக போட்டியிட்ட நவீந்தர் 472 வாக்குகள் பெற்று பொதுச்செயலாளராக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து வசந்தம் அணியில் பொதுச்செயலாளராக போட்டியிட்ட நடிகை நிரோஷா தோல்வியடைந்தார்.

வெற்றிக்குப் பிறகாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய தலைவர் பரத்,

மிக சந்தோஷமாக உள்ளது. இவ்வளவு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். வாக்களித்த அனைத்து உறுப்பினர்களும் நன்றிகள்.

என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து உறுப்பினர்களின் முன்பாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

எங்கள் உறுப்பினர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் என்ன பிரச்சன வந்தாலும் நிச்சயம் அதற்கு தீர்வு காணப்படும். முதல் கட்டமாக வேலை வாய்ப்பு தொடர்பான கோரிக்கையை நிறைவேற்றுவேன்.

தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 60 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வரக்கூடிய நாட்களில் மருத்துவர், நர்ஸ், வழக்கறிஞர் உள்ளிட்ட துறை சார்ந்து நடிப்பவர்கள் எங்களது சங்கத்தில் இருப்போர் தான் நடிக்க முடியும் அதை அடுத்த 15 நாட்களில் அதை செய்ய உள்ளோம். உறுப்பி்னர்கள் சேர்க்கையில் எந்த தவறும் இல்லை.

இவ்வளவு வாக்கு வித்தியாச்த்தில் வெற்றி பெற்றது எனக்கு பொறுப்பாக தெரியவில்லை பயமாக கருதுகிறேன் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன் என தெரிவித்தார்.

சில விஷயங்கள் அவர்கள் இடம் கற்றுக்கொண்டு உள்ளேன். எங்கள் சங்கத்தினரின் உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பின் தங்கி உள்ளது.

சிறிய கதாபாத்திரம் நடிப்பதில் எங்களது சங்கத்தை சார்ந்த நபர்கள் நடிக்க முடியும். அவர்களது அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும் என நம்புகிறேன் என கூறினார். மாற்றுக்கருத்து என்பதை தாண்டி தயாரிப்பாளர் சங்த்தினர் இடம் பேசி ஒரு சில விஷயங்களை செய்ய உள்ளோம்

ஒரு சில செயல்பாடுகளில் பின் தங்கி உள்ளோம். அதனை சீர் செய்ய உள்ளோம். கல்வி மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்பட உள்ளோம். இலவச மருத்துவம் கொண்டு வர உள்ளோம்.சின்னத்திரை கட்டிடம் குறித்து பல கட்டமாக உள்ளது அது நடந்தால் நன்றாக இருக்கும் பார்போம்

இன்றயை தேர்தலில் வாக்களிக்க முடியாமல் ஒரு சில உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறித்த கேள்விக்கு? இதற்கு முன்னாடி சில பிரச்சனைகள் உள்ளது. அதை படிபடியாக சரிசெய்வோம். இப்போது அதை பற்றி பேச வேண்டாம்.

70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு நிதியுதவி வழங்க உள்ளோம். தொகை இன்னும் முடிவு செய்யபடவில்லை அதனை முன்னெடுத்து செல்வோம். அனைத்து அணியினர் உடனும் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ