ஆசிய கோப்பைக்கான அணிக்கு கேப்டன் சுப்மன் கில்? சூர்யகுமார் யாதவா? - செப்டம்பர் 19 ல் முடிவு
மும்பை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியைத் தேர்ந்தெடுக்க, ஆகஸ்ட் 19 ஆம் தேதி மும்பையில் அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக் குழு, கேப்டன் சூர்யக
ஆசிய கோப்பைகான அணிக்கு கேப்டன் கில்லா அல்ல சூர்யகுமார் யாதவா?


மும்பை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியைத் தேர்ந்தெடுக்க, ஆகஸ்ட் 19 ஆம் தேதி மும்பையில் அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக் குழு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அணி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதற்கான முன்னோட்டமாக ஆசிய கோப்பை அணி தேர்வு இருக்கும் என்பதால், செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுவதோடு, சமீபத்தில் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் அணியை சிறப்பாக வழி நடத்தியதோடு, சிறப்பாக விளையாடிய சுப்மன் கில்லை அனைத்து விதமான போட்டிக்கும் கேப்டனாக நிமியக்க வேண்டும், என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

எனவே, சுப்மன் கில் கேப்டனாக நியமிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதன்படி மூலம், ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / J. Sukumar