ராேபோவிற்குள் உருவாகும் குழந்தை-விஞ்ஞானிகளின் புது படைப்பு!
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) தொழில்நுட்ப உலகை பொருத்தவரை, அடிக்கடி வியத்தகு வளர்ச்சிகள் பல வந்த வண்ணம் இருக்கின்றன. சீன விஞ்சானிகள் முதன்முறையாக கர்ப்பகால ரோபோவை கண்டுபிடித்து இருகின்றனர். இது, உண்மையான மனிதர்களை போலவே, 10 மாதம் கர்ப்பத்தை சுமத்து செல
ராேபோவிற்குள் உருவாகும் குழந்தை..விஞ்ஞானிகளின் புது படைப்பு!


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

தொழில்நுட்ப உலகை பொருத்தவரை, அடிக்கடி வியத்தகு வளர்ச்சிகள் பல வந்த வண்ணம் இருக்கின்றன. சீன விஞ்சானிகள் முதன்முறையாக கர்ப்பகால ரோபோவை கண்டுபிடித்து இருகின்றனர்.

இது, உண்மையான மனிதர்களை போலவே, 10 மாதம் கர்ப்பத்தை சுமத்து செல்லும் குழந்தையை பெற்றடுக்கக்கூடிய மனித உருவ இயந்திரமாக இருக்குமென நம்பப்படுகிறது.

சிங்கப்பூரின் நான்யங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்டம் வாங்கிய ஜாங் என்பவர், இந்த திட்டத்தை வழிநடத்துபவராக இருக்கிறார்.

இந்த அமைப்பானது, மனித உருவத்தின் வடிவில் ஒரு கருப்பையை உருவாக்கி, அதில் குழந்தையை வளர வைக்க இருக்கிறது. இதன் மூலம் வளரும் கருவானது, ரோபோட்டின் உள் வளர இருக்கிறது. இயற்கையான கருப்பை போலவே இருக்கும் இந்த செயற்கை கருப்பைக்குள், குழந்தைக்கு ஊட்டச்சச்த்துகளும் செல்ல இருக்கின்றன.

இந்த தொழில்நுட்பமானது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவர் ஜாங் இது குறித்து பேசும் போது, கர்ப்ப காலத்தில் இதனால் உண்மையான நபர்களுடன் பாதுகாப்பாக தொடர்பு கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

இந்த ரோபோவின் முன்மாதிரியானது, 2026ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறாது. இதன் விலையானது, 100,000 யுவானுக்கு குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தை பெற முடியாமல் தவிப்பவர்களுக்கு, இது ஒரு பெரும் தீர்வாக இருக்கும் என்று சிலர் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், இது சில சட்ட சிக்கல்களுக்கு உள்ளாகலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒரு பெண் கர்ப்பம் தறிக்கையில், தாய்வழி ஹார்மோன் மாற்றம், குழந்தைக்கு நோயெதிர்ப்பு அமைப்புகள், தாயுடனான உளவியல் பிணைப்பு ஆகியவை குழந்தைக்கு இருக்கும். ஆனால், இவற்றை இயந்திரத்தின் வழி எளிதில் பெற இயலாமல் இருக்கும் என்பது இதற்கு எதிராக பேசுபவர்களின் கருத்தாக இருக்கிறது.

பல்வேறு மேடைகளில், இந்த விஞ்ஞான ரோபோவானது விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. சிலர், இதை ஒரு புரட்சிகர விஷயமாக பார்க்கின்றனர். இன்னும் சிலர், இது சமூக அமைப்புகளை சீர்க்குலைக்கும் நோக்கில் இருப்பதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த ராேபோவிற்குள் உருவாகும் குழந்தை குறித்து இன்னும் சில தீர்க்க வேண்டிய சந்தேகங்கள் இருப்பதால், மக்களுக்கு இது குறித்த அதிக புரிதல் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM