Enter your Email Address to subscribe to our newsletters
வாஷிங்டன் , 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
அமெரிக்காவின் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டெனிஸ் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், முன்னணி வீரர்களான ஜானிக் சின்னர் - கார்லோஸ் அல்கராஸ் மோதினார்கள். போட்டியின் முதல் செட்டை கார்லோஸ் அல்கராஸ் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகித்த நிலையில், ஜானிக் சின்னர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அல்கராஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் முதல் முறையாக சின்சினாட்டி ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அல்கராஸுக்கு இந்த வெற்றி ஒரு மறக்கமுடியாத மைல்கல்லாக அமைந்தது, கார்லோஸ் மோயா (2002) மற்றும் ரஃபேல் நடால் (2013) ஆகியோருக்குப் பிறகு சின்சினாட்டியில் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 கோப்பையை வென்ற மூன்றாவது ஸ்பானியர் என்ற பெருமையைப் அவர் பெற்றார். இந்த ஆண்டு அல்கராஸ் வென்ற 6 வது பட்டம் இதுவாகும். இதில் அவரது முதல் விம்பிள்டன் கோப்பையும் அடங்கும்.
மேலும், 2008 இல் ஆண்டி முர்ரேவுக்குப் பிறகு அவர் இளைய சாம்பியன் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். ஜானிக் சின்னர் மைதானத்தை விட்டு வெளியேறும் போது, அல்கராஸ் அவரை அக்கறையோடு அணுகியது நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது.
இது பற்றி கூறிய அல்கராஸ்,
மன்னிக்கவும். நீங்கள் இப்போது எப்படி உணருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், புரிகிறது. நீங்கள் உண்மையிலேயே ஒரு சாம்பியன், இந்த சூழ்நிலையிலிருந்து, நீங்கள் இன்னும் வலுவாக மீண்டு வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எப்போதும் அப்படித்தான் செய்கிறீர்கள், உண்மையான சாம்பியன்கள் அதைத்தான் செய்கிறார்கள்.
மன்னிக்கவும், மேலும் வலுவாக மீண்டு வாருங்கள், என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / J. Sukumar