Enter your Email Address to subscribe to our newsletters
பீஜிங் , 2 ஆகஸ்ட் (ஹி.ச.)
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலியிறுதிப் போட்டியில், இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, மலேசியாவின் சூங் ஹோன் ஜியான் - முகமது ஹைகல் ஜோடியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கிய மலேசிய ஜோடி முதல் செட்டை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற இந்திய ஜோடி 21-13 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்றில் இரு அணிகளும் மிகச்சிறப்பாக விளையாடியதால் போட்டி பரபரப்பின் உச்சத்திற்கு பார்வையாளர்களை அழைத்து சென்ற நிலையில், 22-20 என்ற கணக்கில் மலேசிய ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி போட்டியில் இருந்து வெளியேறியது.
Hindusthan Samachar / J. Sukumar