பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்திற்கு காரணம் இந்தியாவின் வெற்றிகரமான தாக்குதல், டிரம்ப் அல்ல - சசி தரூர் பேச்சு
புதுடெல்லி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு தனது தலையீடு தான் காரணம் என்று தொடர்ந்து கூறி வரும் டொனால்ட் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர், போர் நிறுத்தத்திற்கு இந்தியாவில் வெற்றிகரம
இந்தியாவின் வெற்றிகரமான தாக்குதல்


புதுடெல்லி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு தனது தலையீடு தான் காரணம் என்று தொடர்ந்து கூறி வரும் டொனால்ட் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர், போர் நிறுத்தத்திற்கு இந்தியாவில் வெற்றிகரமான தாக்குதல் தான் காரணம், டொனால்ட் டிரம்ப் அல்ல, என்று தெரிவித்துள்ளார்.

’India-Pakistan Relations Today? Can They Ever Be Good Neighbours?’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய எம்.பி சசி தரூர்,

மே 9-10 இரவு நடத்தப்பட்ட வெற்றிகரமான தாக்குதல்களும், மே 10 ஆம் தேதி காலை டெல்லிக்கு ஏவுகணைகளை அனுப்பிய பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்து இந்தியா தடுத்து நிறுத்திய திறனும் தான் போர் நிறுத்தத்திற்கு காரணம்.

இந்தியாவில் பதிலடியை தொடர்ந்து பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தனது இந்திய சகாவுக்கு அமைதியைக் கோரி அழைப்பு விடுத்தார், இதனை தொடர்ந்தே போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கியது. டிரம்பினால் அல்ல.என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / J. Sukumar