சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) கடந்த 2024 நவம்பரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும்போது, நீதித்துறையை அவமதிக்கும் வகையில் அதன் செயல்பாடுகளை விமர்சித்து பேசியதாக, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்ன
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடந்த 2024 நவம்பரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும்போது,

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் அதன் செயல்பாடுகளை விமர்சித்து பேசியதாக, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புகார் மீது வழக்குபதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / vidya.b