இபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் அறப்போர் இயக்கம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தொடர்பாக அறப்போர் இயக்கம் பதிலள
High court


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தொடர்பாக அறப்போர் இயக்கம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், முறைகேடு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போர் இயக்கம் அளித்த புகாரை சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு இருந்தது.

தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

முன்னாள் முதல்வர் என்பதால் நேரில் வந்து சாட்சியம் அளிக்க முடியாததால், வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என எடப்பாடி மனு தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ