Enter your Email Address to subscribe to our newsletters
கள்ளக்குறிச்சி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தாட்கோ மூலம் போர்க்லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்க வேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மூன்று மாதம் பயிற்சி காலம். பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலக முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b