மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் அச்சுறுத்தி வருகிறது -கனிமொழி
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி பேசியதாவது, 30 நாட்களில் கைது செய்தால் பதவி போகும் மசோதா தொடர்பான கேள்விக்கு பதில்.. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு மசோதாக்களை நிறைவேற்று
கனிமொழி


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி பேசியதாவது,

30 நாட்களில் கைது செய்தால் பதவி போகும் மசோதா தொடர்பான கேள்விக்கு பதில்..

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு மசோதாக்களை நிறைவேற்றும் போது தன்னிச்சையாக செயல்படுகிறார்கள்.

முக்கியமான மசோதாக்களை ஒன்றிய அரசாங்கம் நாடாளுமன்றம் முடியும் இறுதி நாள் வரை காத்திருந்து கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் மசோதா தொடர்பாக படிப்பதற்கு கூட நேரமோ அவகாசமோ கொடுப்பதில்லை. கருத்துக்கள் சொல்வதற்கும் எதிர்க்கட்சிகளுக்கு அவகாசம் கொடுப்பதில்லை.

தொடர்ந்து இந்த நாட்டின் ஜனநாயகத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுகளை அச்சுறுத்துவதற்காக பல மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருகிறார்கள். மிகத் தெளிவாக பார்க்க முடிகிறது.

மாநில அரசுகள் மக்களால் உருவாக்கக்கூடிய ஆட்சிகளா அல்லது ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து உருவாக்கிய ஆட்சியா என மிகப்பெரிய கேள்வி பாஜக ஆளும் காலத்தில் ஏற்பட்டுள்ளது.

பல தரவுகள் மூலமாகத்தான் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். வாக்கு திருட்டு தொடர்பாக பல தரவுகளோடு தான் குற்றச்சாட்டுகளை நாங்களும் முன்வைத்து வருகிறோம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் வைக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகிறோம்.

ஒவ்வொரு நாட்களும் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து போராட்டம் நடத்தி வருகிறோம். நாளை நாடாளுமன்றம் முடியக்கூடிய நிலையில் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளாத நிலை தான் உள்ளது.

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

Hindusthan Samachar / Durai.J