Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்திய விடுதலைப் போராட்ட வீரரான மாவீரன் ஒண்டிவீரன் அவரது 254-வது நினைவு தினத்தையொட்டி மத்திய அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,அவர் குறிப்பிட்டுள்ளதாவது
மாவீரர் பூலித்தேவனின் படையில் படைத்தளபதியாக இருந்தவர், எதையும் தனித்து துணிச்சலுடன் எதிர் கொண்டவர். தனியொருவராக சென்று ஆங்கிலேயப் படைகளை வலிமையுடன் எதிர்கொண்டவர். ஆங்கிலேயருக்கு வரி செலுத்த மறுப்பு தெரிவித்த காரணத்திற்காக, தங்கள் ஊரான நெற்கட்டான் செவ்வயலை தாக்க வந்த ஆங்கிலேயப் படையை எதிர்த்து, பூலித்தேவரோடு இணைந்து தலைமை தாங்கி வெற்றி கண்டார்.
வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்து, விடுதலைப் போரில் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து, தன்னந்தனியே பகைவர்களை வென்ற 'மாவீரன் ஒண்டிவீரன்' அவர்களது நினைவை போற்றி வணங்கிடுவோம். சமூகத்திற்காக உயிர்நீத்த மாவீரன் ஒண்டிவீரன் போன்றோரின் வீர தீர செயல்களை நமது சந்ததிகளுக்கு கற்றுக்கொடுப்போம்; அய்யாவின் தியாகங்களைப் போற்றுவோம்..! என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ