Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் தலைமையில், காணொளி வாயிலாக நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், அரசால் இதுவரை அறிவிக்கப்பட்ட 1782 பணிகளில் முடிவுற்ற பணிகள் 1007 முன்னைற்றத்தில் உள்ள பணிகள் 775 அவைகளின் பணி வாரியாக ஆய்வு, அனைத்து மண்டலங்களிலும் நடைபெற்று வரும் திட்ட பணிகள், வடகிழக்கு பருவழை முன்னைற்பாட்டுப் பணிகள் மற்றும் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகளின் முன்னைற்றம் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் அவர்கள் அறிவித்த ரூ. 595.18 கோடி மதிப்பில் 15 அறிவிப்புகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
மேலும் 2025-26 ஆண்டின் அறிவிப்பு பணிகளில் ரூ.1321.52 கோடி மதிப்பில் 254 பணிகள் அரசாணை வழங்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.338.00 கோடி மதிப்பில் அரசாணை வழங்கப்பட்ட 12 வெள்ளத் தணிப்புப் பணிகளை பருவமழைக்கு முன்னதாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.98 கோடி செலவில் சிறப்பு தூர் வாரும் பணிகள் சீரிய முறையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் முடிக்கப்பட்டு மேட்டூர் அணையிலிருந்து குறித்த நேரத்தில் பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தின் அனைத்து தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.
இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 114098 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120.13 அடியில் உள்ளது. இச்சூழலில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வெள்ள அபாய எச்சரிக்கையினை விடுக்க சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆண்டில் ஜீன் மாதம் 29.06.2025 தேதியிலும், ஜீலை மாதத்தில் 05.07.2025, 20.07.2025, மற்றும் 25.07.2025 தேதிகளில் 5-வது முறையாக 20.08.2025 இன்று முழுக்கொள்ளளவை (120 அடி) எட்டியது என குறிப்பிட்டு, கிடைக்கும் உபரி நீரை முறை சார்ந்த குளங்கள், ஏரிகள் மற்றும் சரபங்கா போன்ற திட்டங்களுக்கு திருப்பிவிட்டு நீரை முடிந்த அளவு சேமிக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறையின் அரசுச் செயலாளர் ஜெயகாந்தன், நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப்பொறியாளர் (பொது) கோபாலகிருஷ்ணன், நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளர் ஸ்ரீதரன், அனைத்து பொறியாளர்கள் மற்றும் மண்டல தலைமைப் பொறியாளர்கள். கண்காணிப்புப் செயற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ