Enter your Email Address to subscribe to our newsletters
நீலகிரி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சேலாஸ்- சோல்ராக் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் பாதுகாப்பு இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த 12-ம் தேதி நள்ளிரவு அந்தப் பகுதியில் 220 மீட்டர் நீளமுள்ள, ரூ.3 லட்சம் மதிப்புள்ள வேலியை மர்மமான முறையில் கழட்டி எடுத்து கடத்தப்பட்டுள்ளதாக குன்னூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஆய்வாளர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து. சம்பந்தப்பட்ட சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள பல சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்ததில் குற்றவாளிகள்மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் மைசூரில் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து முன்தினம் காலை தனிப்படை காவல்துறையினர் மைசூர் சென்று மூன்று பேரை கைது செய்து அழைத்து வந்தனர்.
விசாரணையில் கூடலூர், சேரம்பாடி பகுதிகளை சேர்ந்த சிவக்குமார்(48), புண்ணியமூர்த்தி(38) சந்தானம் (37) எனவும்,இரும்பு வேலியை கழட்டி எடுத்து காயலான் கடையில் விற்பனை செய்ததாகவும், காவல்துறையினருக்கு பயந்து மைசூரில் பதுங்கி இருந்ததாகவும் குற்றவாளிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து குற்றவாளிகள் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் பிக்கப் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு. குற்றவாளிகள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் குன்னூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN