ஆசிய கோப்பைக்கான இந்திய அணி சிறப்பான தேர்வு - சுனில் கவாஸ்கர் பாராட்டு
மும்பை , 20 ஆகஸ்ட் (ஹி.ச.) 17 வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ''ஏ'' பிரிவில் அங்கம் வகிக்கும்
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி சிறப்பான தேர்வு


மும்பை , 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

17 வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.

இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். அவர் அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், 2025 ஆசிய கோப்பைக்கான அணி மிக சிறப்பாக இருப்பதாக பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் பேட்டிங் வரிசை வெற்றியாளர்களை கொண்டிருப்பதாகவும், அதே நேரத்தில் பந்துவீச்சு தாக்குதல் சூழ்நிலைகளில் பல்துறைத்திறனைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷுப்மான் கில்லை துணை கேப்டனாக நியமித்ததை கவாஸ்கர் குறிப்பாகப் பாராட்டினார், அவரை அணியின் எதிர்காலத் கேப்டனாக இருப்பார் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் சுனில் கவாஸ்கர், அனுபவம் மற்றும் இளைஞர்களின் பலம் நிறைந்த கலவையாக இந்திய அணி இருக்க வேண்டும் என்றும், இது இந்தியாவுக்கு உடனடி பலத்தையும் நீண்டகால நிலைத்தன்மையையும் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் ஸரேயாஸ் ஐய்யர் அணியில் இடம்பெறாதது குறித்து ஆர்.அஸ்வின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சில அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விபரம் :

சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஹர்ஷித் ராணா

Hindusthan Samachar / J. Sukumar