மும்பைக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!
மும்பை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பினால் ஒருவர
மும்பைக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை


மும்பை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 3 பேர் காயமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்றும் மும்பையில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக அடுத்த 3 மணி நேரத்திற்கு மும்பையில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / J. Sukumar