Enter your Email Address to subscribe to our newsletters

லண்டன் , 4 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றியை நோக்கி பயணித்து வரும் நிலையில், ஜோ ரூட் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டதோடு, புதிய சாதனை படைத்துள்ளார்.
தங்களது சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதம் விளாசியவர்கள் பட்டியலில் 24 சதங்களுடன் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறினார். பாண்டிங் (ஆஸ்திரேலியா), காலிஸ் (தென் ஆப்பிரிக்கா), ஜெயவர்தனே (இலங்கை) ஆகியோர் தங்களது சொந்த மண்ணில் 23 டெஸ்ட் சதங்களை விளாசி அப்பட்டியலில் 2 ஆம் இடத்தில உள்ளனர்.
Hindusthan Samachar / J. Sukumar