Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 5 ஆகஸ்ட் (ஹி,ச.)
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என்று இந்தியா சமன் செய்தது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 5 வது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 28 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் 26 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4வது இடத்தில உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 36 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்திலும், இலங்கை இரண்டாவது இடத்திலும் உள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar