Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 6 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தற்போதுள்ள 1.62 லட்சம் என்ற சி.ஐ.எஸ்.எப். (மத்திய தொழில் பாதுகாப்பு படை) வீரர்களின் எண்ணிக்கையை 2.2 லட்சம் ஆக அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, போருக்கு தயாராகும் வகையில், ஆண்டுக்கு 14 ஆயிரம் வீரர்கள் என 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதனால், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும்.
விமான நிலையங்கள், பெருநகரங்கள், வி.ஐ.பி. மண்டலங்கள் மற்றும் முக்கியம் வாய்ந்த உள்கட்டமைப்புகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு தேவைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதனால், 2029-ம் ஆண்டுக்குள் 70 ஆயிரம் புதிய வீரர்கள் சி.ஐ.எஸ்.எப்.-பில் சேர்க்கப்பட உள்ளனர்.
இதில், அதிக அளவில் பெண்களையும் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / JANAKIRAM