Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 6 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு மக்கள் வெறுப்புடன் இருப்பதாகவும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.
சென்னையிலிருந்து சாத்தூர் செல்வதற்காக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர் சந்தித்து கூறுகையில்,
வட மாநில நபர்களை இங்கு சேர்க்கப்பட்டுள்ளது தவறான செயல், இது ஒரு ஊழல். மேற்கு வங்காளம் போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழு லட்சம் அல்ல, அதற்கு மேல் எவ்வளவு சேர்த்தாலும் பரவாயில்லை இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. இன்னும் தேர்தலுக்கு எட்டு மாத காலங்களே உள்ள நிலையில் மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள். உறுதியாக ஆட்சி மாற்றம் வரும்.
திருப்பூரில் ரோந்து சென்ற எஸ்ஐ வெட்டி படுகொலை செய்துள்ளனர். காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை. டிஜிபி அளவில் மட்டுமே பாதுகாப்பு உள்ளது. இதைப் பற்றிய முதல்வர் கண்டு கொள்வதில்லை. ரிவ்யூ மீட்டிங் கூட செய்வதில்லை. இந்த ஆட்சி ஒரு மோசமான ஆட்சியாக உள்ளது.
ஓபிஎஸ் குறுஞ்செய்தி தான் ஆதாரம் என கூறியதற்கு, அதைப் பற்றி அவரிடம் கேளுங்கள் என்று கூறி விடைபெற்றார்.
Hindusthan Samachar / ANANDHAN