ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - சாத்விக், சிராக் ஜோடி காலியிறுதிக்கு முன்னேற்றம்
ஹாங்காங் , 12 செப்டம்பர் (ஹி.ச.) ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2 வது சுற்று போட்டி ஒன்றில் இந்தியாவின் சாத்விக் - ரிஆக் ஜோடி, தாய்லாந்தின் பக்காபொன் தீரரசாகுல் - சுக்புன் ஜோடியை நேற்று எதிர்
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - சாத்விக், சிராக் ஜோடி காலியிறுதிக்கு முன்னேற்றம்


ஹாங்காங் , 12 செப்டம்பர் (ஹி.ச.)

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2 வது சுற்று போட்டி ஒன்றில் இந்தியாவின் சாத்விக் - ரிஆக் ஜோடி, தாய்லாந்தின் பக்காபொன் தீரரசாகுல் - சுக்புன் ஜோடியை நேற்று எதிர்கொண்டது.

இதில் தாய்லாந்து ஜோடி முதல் செட்டை 21-18 என கைப்பற்றிய நிலையில், சாத்விக் - சிராக் ஜோடி, அடுத்த இரண்டு செட்களை 21-15, 21-11 என வென்று காலியிறுதிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் காலிறுதி போட்டியில் சாத்விக்-சிராக் ஜோடி மலேசிய ஜோடியை எதிர்கொள்கிறது.

Hindusthan Samachar / J. Sukumar