விசாகப்பட்டினத்தில் விரைவில் திறக்கப்படும் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி ஸ்கைவாக் பாலம்
விசாகப்பட்டினம், 15 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் கைலாசகிரியின் மீது 55 மீட்டர் நீளமுள்ள ஒரு புதிய கண்ணாடி பாலம் திறக்கத் தயாராக உள்ளது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையி
விசாகப்பட்டினத்தில் விரைவில் திறக்கப்படும் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி ஸ்கைவாக் பாலம்


விசாகப்பட்டினம், 15 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் கைலாசகிரியின் மீது 55 மீட்டர் நீளமுள்ள ஒரு புதிய கண்ணாடி பாலம் திறக்கத் தயாராக உள்ளது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், சில நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளது.

ஒரே நேரத்தில் 100 பேர் நிற்கும் வகையில் இது கட்டப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே நேரத்தில் 40 பேர் மட்டுமே அதில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கைலாசகிரி மலைகளில் உள்ள டைட்டானிக் வியூ பாயிண்ட்டுக்கு அருகில் இந்த பாலம் அமைந்துள்ளது. இது பூமியில் இருந்து 862 அடி (262 மீட்டர்) உயரத்திலும், கடல் மட்டத்திலிருந்து 1,000 அடி உயரமும் கொண்ட இந்தப் பாலம் சிறப்பு வாய்ந்தது.

சீனாவில் கட்டப்பட்ட கண்ணாடி ஸ்கைவாக் பாலம், உலகின் மிக நீளமான மற்றும் மிக உயரமான கண்ணாடி பாலமாகும். இந்த பாலம் 430 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் கொண்டது, மேலும் பூமியில் இருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவில் கட்டப்பட்ட பாலத்துடன் இது போட்டியிட முடியாது என்றாலும், அதன் சொந்த அழகைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இது தவிர, இந்த பாலமானது 40 மி.மீ. திக் கொண்ட டெம்பர்டு கிளாஸ் மற்றும் 40 டன் ஸ்டீல் கொண்ட மூன்று அடுக்குகளால் ஆனது. இது மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் திறன் கொண்டதாகவும், ஒரு சதுர மீட்டருக்கு 500 கிலோ வரை எடையைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது.

இந்த பாலம் விரைவில் மக்களுக்காக திறக்கப்படலாம். இருப்பினும், அதன் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு குழுவும் பாலத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை செலவிடலாம்.

இந்த பாலத்திற்கான நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவருக்குமே இது மலிவு விலையில் கிடைக்கிறது.

இந்த திட்டம் SSM ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் (விசாக்), பாரத் மாதா வென்ச்சர்ஸ் (கேரளா) மற்றும் விசாகப்பட்டினம் பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (VMRDA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் இந்த பாலம் கட்டப்பட்டது.

Hindusthan Samachar / JANAKI RAM