பொது சுகாதாரத் துறை ஆய்வக நுட்புநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பணி நியமன ஆணையினை வழங்கினார்
சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச) சென்னை ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று(செப் 15) கலந்த
பொது சுகாதாரத் துறை ஆய்வக நுட்புநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பணி நியமன ஆணையினை வழங்கினார்


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச)

சென்னை ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று(செப் 15) கலந்து கொண்டார்.

பொது சுகாதாரத் துறை ஆய்வக நுட்புநர் பணியிடத்திற்கும், உணவு பகுப்பாய்வு கூட்டங்களில் முதுநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கும், ஆய்வக தொழில்நுட்புநர் பணியிடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பணி நியமன ஆணையினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு துறை ஆணையர் லால்வேணா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் சோமசுந்தரம், கூடுதல் இயக்குனர் தேவர் பார்த்தசாரதி, துணை இயக்குனர் சித்ரசேனா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Hindusthan Samachar / vidya.b