Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் உணவு தானிய பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.
இதன்காரணமாக கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், அங்காடி நிர்வாக சிறப்பு அதிகாரிகள் பாண்டியன், அமுதா சுகந்தி பாலா, காமாட்சி நங்கையர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இதனால் போக்குவரத்து சீராக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது,
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தினமும் அதிகாலையில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
தற்போது அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி உத்தரவின்படி, மார்க்கெட்டில் வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த 5 சிறப்பு அதிகாரிகள் நியமித்துள்ளனர்.
இதனால் வாகனங்கள் சிரமமின்றி சென்று வருகிறது. எனவே, அங்காடி நிர்வாக முதன்மை அலுவலருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b